வாய்ப்புகள் இல்லாததால் தரை லோக்கலுக்கு இறங்கிய நடிகை ஹன்சிகா…!!

வாய்ப்புகள் இல்லாததால் தரை லோக்கலுக்கு இறங்கிய நடிகை ஹன்சிகா…!!

தமிழில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படுவர் ஹன்சிகா. சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி போன்ற முன்னணி முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏனோ வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். தற்போது தமிழில் குலேபகாவலி என்ற ஒரு படம் மட்டும்மே கையில் உள்ளது. சம்பளத்தை குறைக்க தயார் என்று கூறியும் வாய்ப்புகள் இல்லை.

இதனால் வாய்ப்புகள் இன்றி விளம்பரங்களில் நடிப்பதோடு, கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் நடந்த செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரை காண அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திண்டாடினர். ஹன்சிகா வருகையில் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Topics: Cinema News