என் நாயை காணோம் என பதிவிட்ட நடிகை திரிஷா.!! கலாய்தெடுத்த நெட்டிசன்ஸ்.!!

என் நாயை காணோம் என பதிவிட்ட நடிகை திரிஷா.!! கலாய்தெடுத்த நெட்டிசன்ஸ்.!!

நடிகை திரிஷாவின் தோழி வளர்த்து வந்த மஃப்பின் என்ற பெண் நாய் சில தினங்களுக்கு முன் தொலைந்துவிட்டது.

இதனையடுத்து நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு தரப்படும் என திரிஷா பதிவிட்டிருந்தார். இந்த நாய் திரிஷாவிடம் அதிக அளவில் பாசமாக பழகுமாம்.

எனவேதான் தனது ட்விட்டர் பக்கத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். இதனையடுத்து திரிஷாவை கலாய்த்து பலரும் பதிவிட்டுள்ளனர்.

பப்பிம்மா வேட்பு மனு நிராகரிப்பு இப்போது பப்பியை காணவில்லை என்று விளம்பரமா என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

திரிஷாவின் டுவிட்டர் விளம்பரத்தில் ஒரு போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை திரிஷாவின் நம்பர் என்று ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

அது திரிஷாவின் தோழி நம்பர் என்று தெரிந்த உடன் பலரும் திரிஷாவின் நம்பர் வேண்டும் என்று கேட்கிறார்களாம்.

Related Topics:Cinema News