பிரபல நடிகை கால்ஷீட்டிற்காக காத்துக்கிடக்கும் உலகநாயகன்? அந்த நடிகை யார் தெரியுமா?

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் படத்தை தயாரிக்கிறது. தந்தை – மகள் வேடத்தில் நடிகர் கமலும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக்கப்படுகிறது.சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்கியது.

” படப்பிடிப்பை முடித்து வந்த நிலையில், தனது அலுவலக மாடியிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார் கமல். கால் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வந்தார். பூரணமாக குணமாகி வந்ததையடுத்து கடந்த வருட அக்டோபர் மாதம் முதல் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கும் அளவுக்கு கமல் முழு அளவில் குணம் அடையவில்லை என்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கமல், தயாராக இருக்கும்போது மற்ற கலைஞர்களின் கால்ஷீட்டுக்கள் கிடைக்காமல் படக்குழு தவிக்கிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட் கமலுக்கு கிடைக்கவில்லையாம். இவர் தற்போது பிறமொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறாராம்.

அவரின் கால்ஷீட் கிடைத்தவுடன் சூட்டிங்கை தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் சூட்டிங்கை நிறைவு செய்யவிருக்கிறாராம் கமல்.

Related Topic:cinema news