கர்நாடகாவை தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் மீண்டும் சிக்கல்?

பாகுபலி முதல் பாக வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. பண பிரச்சனை தொடர்பாக இப்படத்தை தடை செய்ய கோரி கடந்தவாரம் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டு சிக்கல் தீர்ந்தது.இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பாகுபலி வெளியீட்டாளர் ராஜராஜன் ’சவாலே சமாளி’ படத்திற்காக என்னிடம் ரூ.1.11 கோடி கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் இன்று வரை அவர் கடனை திரும்ப செலுத்தவில்லை. ஆகவே எனக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.1.48 கோடியை ராஜராஜன் என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அவர் படவெளியீட்டின் அனைத்து உரிமையையும் முடக்கி வைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக பட தயாரிப்பாளர் ராஜராஜன் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கையும், 4 வாரத்திற்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

related topic:cinema news