மற்றவர்களின் ஜட்டி, பிராவை துவைக்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள்..! பிக்பாஸ் குறித்து ஜூலி ஓபன் டாக்…!!

மற்றவர்களின் ஜட்டி, பிராவை துவைக்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள்..! பிக்பாஸ் குறித்து ஜூலி ஓபன் டாக்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியா மற்றும் பரணிக்கு பெரும் புகழ் கிடைத்தது.

ஆனால் அதே நேரம் காயத்ரி, ஜூலி போன்றோருக்கு கெட்ட பெயர் கிடைத்து வெளியில் நடமாட முடியாத அளவுக்கு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரையும் பிக்பாஸ் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்று விதிமுறை இருந்தது.

தற்போது நிகழ்ச்சி முடிந்து விட்டதால் அதில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி, லைவ் சாட் என பிசியாகி விட்டனர்.

இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜூலி கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை பெரும் கொடுமைகளை அனுபவித்தேன்.

முக்கியமாக இரண்டு பேரின் ஜட்டி மற்றும் உள்ளாடைகளை துவைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று கூறி உள்ளார்.

அவர் கூறுவதை பார்த்தால் அவர் காயத்ரியின் ஜட்டியைதான் துவைத்து இருப்பார் என்று கருதப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இதனை அவர் கூறினாலும் மக்கள் நம்புவார்களா என்ற சந்தேகம் உள்ளது.

Related Topics: Cinema News