பிக்பாஸ் ஆரவிற்கு அடித்த ஜாக்பாட்.. அது என்ன தெரியுமா?

பிக்பாஸ் ஆரவிற்கு அடித்த ஜாக்பாட்.. அது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர் ஆரவ். அதே நிகழ்ச்சியில் இவரை ஓவியா காதலித்ததால் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். டைட்டில் படம் வென்றால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதில் சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் படத்தில் மட்டுமே இப்போதைக்கு கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில்தான் நடிக்க உள்ளார்.

இது காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் மீண்டும் ஒரு புன்னகை என்ற குறும்படத்தை தழுவி எடுக்கப்படும் படமாகும்.

இரண்டு கதாநாயகிகளை கொண்ட இந்த படத்தை சமீரே இயக்குகிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Topics: Cinema News