ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நடிகை மீனா..! என்ன ஆனார்…!!

ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நடிகை மீனா..! என்ன ஆனார்…!!

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் மீனா. பின்னாளில் அதே ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து 90களில் தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர்.

இவர் ரஜினிகாந்த்துடன் நடித்த முத்து படம் ஜப்பானில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. இதனால் மீனாவுக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உள்ளனர். 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

கணவர், குழந்தையுடன் பெங்களூரில் செட்டிலாகி விட்டார். இவரது மகள் நைனிகா தெறி படத்தில் விஜயுடன் நடித்து அசத்தி இருந்தார். நீண்ட இளைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் மீனா நடித்து வருவதாக கூறப்பட்டது.

எனினும் தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் ஏக்கத்தை நடிகை மீனா போக்குவாரா.

Related Topics: Cinema News