சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் நடுத்தெருவுக்கு வந்த பெண்..! லட்சுமி ராமகிருஷ்ணன் எதிராக வழக்கு…!!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் நடுத்தெருவுக்கு வந்த பெண்..! லட்சுமி ராமகிருஷ்ணன் எதிராக வழக்கு…!!

பிரபல தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலமாக லட்சுமி ராமகிருஷ்ணன் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Êசசமீபத்தில் நிகழ்ச்சியை வெளியேறியது போன்ற புரமோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் தான் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாக ஒரு பெண் கூறி உள்ளார்.

இந்த பெண் கோவை அருகே உள்ள காரமடையை சேர்ந்த கற்பகநாயகம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக காதலனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இதற்கிடையில் அவர் அந்த பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த பெண் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் இங்கு வாருங்கள் எங்களிடம் வக்கீல்கள் உள்ளனர். அவர்கள் மூலம் உனக்கு நியாயம் கிடைக்க செய்கிறோம் என்று கூறி உள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண்ணும் சென்றுள்ளார். அந்த பெண்ணிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த பெண்ணின் அந்தரங்க விஷயங்களை எல்லாம் கேட்டு பதிவு செய்துள்ளார்.

மேலும் காதலன் மற்றும் அவரது புது மனைவியிடமும் பேசி உள்ளனர். எனவே தொலைக்காட்சியில் அந்த வீடியோ வெளியாகாமல் இருந்தால் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன் என கூறி உள்ளார். அதன்படி அந்த பெண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் அந்த தொலைக்காட்சியில் அந்த வீடியோ வெளியானது. இப்போது காதலனும் நிரந்தரமாக கைவிட்டு விட்டார். பெற்றோர் மற்றும் தங்கையும் சேர்ந்து கொள்ளவில்லை. இதனால் இருக்க வீடு, வாசல் இன்றி நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக அழுது புலம்புகிறார்.

மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த பெண். இது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

Related Topics: Cinema News