வடிவேலுவும் நானும் இணைந்து நடிப்போம்!! நேற்று வரையில் சண்டை போட்டார்கள்… என்னைய்யா இப்படி பண்றீங்களே?

நடிகர் வடிவேல் தனக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தை போலி பத்திரம் மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது நீதிமன்றத்தில் நடிகர் வடிவேல் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் வடிவேல் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் நேரில் ஆஜராகினார்.

இருவரை நேரில் அழைத்து சமதானம் பேசியபோது இவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இது தொடர்பாக நடிகர் சிங்கமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது நானும் வடிவேலுவும் இணைந்து நடிக்க தயாரிப்பாளர் வேண்டுகோள் வைப்பதால் விரைவில் இணைந்து நடிக்கலாம் எனவும், நான் எப்போதும் வடிவேலுக்கு சப்போர்ட்டாகவே இருப்பேன். நான் அவருக்கு உதவி செய்தது எனக்கு பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக சிங்கமுத்து தெரிவித்தார்.

related topic:cinema news