நடிகர் விஷால் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்காரி..! நகை, பணத்துடன் ஓட்டம்…!!

நடிகர் விஷால் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்காரி..! நகை, பணத்துடன் ஓட்டம்…!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பணியாற்றிவருகிறார். அதோடு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் அவரது அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் களவு போயுள்ளது.

வீட்டிலிந்த தங்க நகை ஆபரணங்கள் சிலவற்றை காணவில்லை என்பதையறிந்தவர்கள் மேனேஜர் மூலம் அண்ணாநகர் போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வீட்டில் வேலை செய்து வந்த பெண் புஷ்பா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் வேலைக்கு வராமல் திடீரென நின்று விட்டாராம். இதனால் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Related Topics: Cinema News