லொள்ளுசபா ஜீவா நடிக்கும் படத்தின் இசையை நடிகர் ரஜினி வெளியிட்டார் (வீடியோ இணைப்பு)

இயக்குனர் ரங்கா இயக்கும் ’ஆரம்பமே அட்டகாசம்’ படத்தில் லொள்ளுசபா ஜீவா கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சங்கீதா பட் அறிமுகமாகிறார்.

படத்தில் பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத், வாசுவிக்ரம், ஞானசம்பந்தம், முனீஸ், நெல்லை சிவா, தேனடை மதுமிதா, லொள்ளுசபா மனோகர், லொள்ளுசபா சேசு, லொள்ளுசபா உதய் என நகைச்சுவை பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

தமிழ் ஹீரோக்களில் உலக நாயகன் கமல்ஹாசனை தான் முத்த மன்னன் என அழைக்கப்படுவார். கமலின் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப்ஸ் டூ லிப்ஸ் கிஸ் நிச்சயம் இடம்பெறும்.

ஆனால் ஆரம்பமே அட்டகாசம்’ படத்தில் ஜீவா பத்து லிப்லாக் காட்சிகள் நடித்து அசத்தியுள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா என்பது அறிந்த ஒன்று தான்.

இன்று ஆரம்பமே அட்டகாசம் படத்தின் இசையை நடிகர் ரஜினிகாந்த்  வெளியிட்டார். இதற்கு லொள்ளுசபா ஜீவா தனது டுவிட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

related topic:cinema news