நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களை ஏமாற்றுகிறார்.! வம்புக்கு இழுக்கும் பிரபல காமெடி நடிகர்..!

நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஆவாரம்பூ என்ற படத்தில்  ’எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்கிடுவான்” என்ற வசனம் மூலம் பிரபலம் அடைந்தார்.  இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.

சினிமாவில் நடிகராக அனைவராலும் அறியப்பட்டாலும் , இவர் ஒரு பிரபல பத்திரிகையாளர் என்பது பலருக்கு தெரியாது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நடிகர் லாரன்ஸ் பற்றி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்பட விமர்சனம் 3 நாள்கள் கழித்து எழுத வேண்டுமென கூறினார்.

நடிகர் லாரன்ஸ் முதலில் ஒன்றை மறந்து விட்டார். அவர் நடித்த காஞ்சானா திரைப்படம் வெற்றிக்கு காரணம் மீடியா தான். அவரது படம் குறித்து கொடுத்த விமர்சனம் தான் படம் வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடிகர் லாரன்ஸ் ரூ. 1 கோடி கொடுத்தது உண்மையில்லை.

அந்த சமயத்தில் 500 ரூபாய் பணத்தட்டுபாடு இருந்த நிலையில் அவரால் எப்படி ரூ.1 கோடி கொடுத்து இருக்க முடியும் ? குறைந்தது சாப்பாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே அவர் கொடுத்து இருப்பார். அவர் கோயில் கட்டியுள்ள ராகவேந்திரா சாமியை மனதில் வைத்து உண்மையை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் கூறிய அதே கருத்தை சத்யராஜ் மற்றும் விஷாலும் கூறியிருந்தார்கள். சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்த படமும், விஷால் நடித்த படமும் தொடர் தோல்வி அடைந்து வருகிறது. அதனால் அவர்களும் அதே கருத்தை வலியுறுத்தி பேசுகிறார்கள். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் ராகவா லாரன்ஸை வம்புக்கு இழுத்ததுடன் கூடவே சத்யராஜ் மற்றும் விஷாலையும் வம்பிழுக்கிறார்.

related Topic: cinema news