நடிகர் கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் கமல் பிரபல தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டியில் மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்தை பதிவு செய்து இருந்தார்.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பழவூர் காவல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி செந்தில்குமார் முன்னதாக உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் கமல் வள்ளியூர் நீதிமன்றத்தில் வருகிற மே 5ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Topics:Cinema News