அப்போ, உங்க பேரு கருப்பன் இல்லையா?

நடிகர் விஜய்சேதுபதி இந்த வருஷத்தில் புது படமாக முதல் படமாக ஷூட்டிங் போக போவது ரேணிகுண்டா பன்னீர் செல்வத்துடன். இந்த படம் பொங்கல் முடிந்து தொடங்கப்போகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மாடுபிடி வீரனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ஹீரோயின் அதே தான். லட்சுமி மேனன். ஜல்லிக்கட்டு சீன்கள் அதிகம் இருக்கும் படமாக பாரம்பரியம் பேசும் படமா அமையும் என்று எதிர்பார்த்துள்ளனர். படத்திற்கு பெயர் கருப்பன்.

விக்ரம் வேதா, கவண் முடித்த கையோடு மதுரைக்காரனாக நடிக்க, மதுரைக்கு போகும் விஜய் சேதுபதிக்கு தான் கருப்பன்னு பெயர் என்று பார்த்தால், அது அவர் கூட நடிக்க போகும் காளைக்கு கூட இருக்கலாம் என்று முணுமுணுக்குது கோலிவுட்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY