சிம்புனால மட்டும் சிக்கல் வராது…சிம்புன்னாலே, பிரச்சனை வரும்!

நடிகர் சிம்பு நடிக்கும் படங்களில் அவருக்கு சிக்கல் ஏற்படுவது சகஜம். இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

ட்ரெண்டிங் பாடல் ஒன்றை ரிலீஸ் பண்ணி இருக்கும் சிம்பு, அதற்கான ஷூட்டிங்கையும் இரண்டு நாளைக்கு முன்ன ஆடி முடிச்சி விட்டார். அஸ்வின் தாத்தாவும், தமன்னாவும் ஆடப்போறாங்களாம். தாத்தாவுக்கு இந்த வயசில லவ் வந்துடுதாம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும், பிரச்சனைன்னு சொன்னோமே, அது என்ன தெரியுமா?

இந்த ட்ரிபிள் ஏ க்கு பிரச்சனை தரப்போறது, சிம்பு இல்லை. சிம்புவை வச்சி இந்த படத்தை எடுத்துட்டு இருக்கிற ப்ரொடியூசர் மைக்கேல் ராயப்பனால. பைனான்ஸ் செய்த பார்ட்னரை பங்கு பிரிக்காம விரட்டிட்டாராம். இதனால் கோர்ட்வரை பஞ்சாயத்து போய் ரிலீஸ் அப்போ தடை வர சான்ஸ் இருக்காம்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY