இன்னும் எத்தனை வருஷம் தான் மக்களுக்காக போராடுவார் ரஜினி? இதோ பதில்

ரஜினிகாந்தின் கேரியரில் ரொம்ப முக்கியமான படங்களில் ஒன்று பாட்சா. அதில் பாட்சாவாக ரஜினிகாந்த் மும்பை மக்களுக்காக போராடுவார்.

அதன் பின் கபாலி. கபாலியில் மலேசிய வாழ் தோட்டத்தொழிலாளிகளின் துயர் துடைக்க பாடுபடுபவராக நடித்திருந்தார். படம் கொடுத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், விமர்சனங்கள் அரை வேக்காட்டுத்தனமான டான் படம் என்று சொன்னபோதிலும் வசூலை வாரிக்குவித்தது.

இப்போது 2.0 படத்திற்காக ஷங்கரின் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் ரஜினிகாந்த்,அடுத்து மீண்டும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய இருக்கிறார்.

இந்த படமும் ரஜினி அடித்தட்டு மக்களுக்காக போராடுவது போன்று உள்ளதாம். மும்பையில் படமாக்கப்படும் இந்த படத்திற்கான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் .

Related Topics:Cinema News

LEAVE A REPLY