காசு செல்லாதுன்னு சொன்னபோது பேசியவர், இப்போ ஏன் மௌனம்?

ரஜினிகாந்த், எதுக்கும் கருத்து சொல்லக்கூடாது அல்லது ஒட்டு மொத்த மக்கள் மனதை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து சொல்லணும்.
ஜல்லிக்கட்டு தடை என்பதற்கு பின்னால் பன்னாட்டு நிறுவனங்கள் சதி இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று தமிழகத்தில் பேரணிகள், மாணவர் போராட்டங்கள் போன்றவை நடந்து வருகின்றன.

கமல் ஹாஸன், சிம்பு, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் என்று திரையுலகம் உட்பட, ஒட்டுமொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போது, ரஜினி ஒண்ணுமே இன்னும் பேசலை.

ஆனால், பணம் செல்லாதுன்னு சொன்னா உடனே தன் கருத்தை பதிவு செய்தவர், இப்போது மவுனமாக இருப்பது ஏன்?முரட்டுக்காளை படத்தில் காளையனாக நடித்ததோடு சரியா? என்று நெட்டிசன்கள் கேள்வி.

Related Topics:Cinema News

LEAVE A REPLY