14 வருடத்திற்கு பிறகு மீண்டும் அம்மாவான கவுதமி!

நடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனின் உற்ற தோழியாக இருந்து வந்தவர். 13 வருடம் திருமணம் இல்லாமல் தம்பதிகளாய் சேர்ந்து வாழ்ந்த கவுதமி கமல்ஹாசனை சமீபத்தில் பிரிந்தார். பிரிந்த பிறகு அவரிடம் எந்த செட்டில்மென்ட்டும் வாங்காமல்,  சினிமா வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தன் சொந்த வருமானத்தில் வாழ முற்படுகிறார்.

கவுதமி 2003 ம் ஆண்டு தான் மலையாள படங்களில் நடித்தது. கிட்டத்தட்ட 14 வருடத்திற்கு பிறகு மலையாள பட உலகில் நுழைந்துள்ள கவுதமி, தற்போது அம்மாவாக நடிக்க போகிறார்.

பி.டி. குஞ்சு முகமது இயக்கப்போகும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் தான் அம்மாவாக போகிறார். இந்த படம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போல, அம்மா-மகன் உறவினை மையமாக கொண்டதாம்.

இந்த படத்தில் பாத்திமா பீவி என்ற கேரக்டரில் நடிக்க போகும் கவுதமி, ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு தான் அம்மாவாக நடிக்கப்போகிறார்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY