என் பெண்டாட்டி இன்னொருத்தரை கட்டிப்பிடிப்பதா? திலீப் கோபம்

மலையாள ஹீரோ திலீப் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்த நடிகை காவ்யா மாதவனுக்கும் இது இரண்டாவது திருமணம்.

திருமணத்திற்கு பிறகு காவ்யாவை துபாய்க்கு ஹனிமூன் ட்ரிப் போகும்போது பொது இடத்தில பார்த்தது. இந்த நாள் வரை அவரை வெளியே காணோம்.தன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு கூட போடவில்லை.அதனால், அவர் நடிக்க வருவதும் சந்தேகமே என்று மல்லுவுட் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், திலீப் தன் முதல் திருமணத்தில் நடிகை மஞ்சு வாரியாரை திருமணம் செய்தார். அதன் பின் அவரை ஒரு விழாக்களுக்கோ, சமூக வலைப்பதிவிலோ எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

மஞ்சு-திலீப் திருமணம் நடந்து, சில ஆண்டுகள் கழித்து, இயக்குனர்
பிரியதர்ஷன் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் கேட்டபோது,’என் மனைவி பிற ஆண்களை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது’ என்று சொல்லிவிட்டார்.

அதன் பின், இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு பின் தான், மஞ்சு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஆக, இனி காவ்யாவையும் யாரும் எங்கேயும் பார்க்கமுடியாது. மீண்டும் நடிக்க மாட்டார் எனபதை ரசிகர்கள் பெரிய ஏமாற்றமாய் பார்க்கிறார்கள்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY