விஐபி ஷூட்டிங்கில் துணை நடிகை மர்ம மரணம்!

பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரன். அவரது மகன் மனோரஞ்சன். அவர் நடித்து வரும் படம் விஐபி. நந்தகிஷோர் இயக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் பெங்களூர் அவலஹள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது.

அது சாங் ஷூட் என்பதால், 160க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகள், டான்சர்கள் கலந்து கொண்டனர். மாலை ஷூட்டிங் முடிந்து போகும்போது பத்மாவதி என்ற மத்திய வயதுடைய பெண் மாயமானது தெரிந்தது. படக்குழு அவரை தேடியது. ஷூட்டிங் நடந்த இடத்தின் பக்கத்தில் கட்டிடட வேலை நடைபெற்று வந்தது. அங்கு லிப்ட் உள்ள பகுதியில் பத்மாவதி பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை நடந்து வருகிறது. இந்த பத்மாவதி 20 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார். ஜக்கூரை சேர்ந்தவர்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY