இளம்பெண்ணை கற்பழித்து வீட்டின் அருகிலேயே புதைத்த காமுகன்.. !பெங்களூரையே அதிர வைத்த சம்பவம்..!!

பெங்களூரு ஊரக மாவட்டம் ஆனேக்கல் அருகே உள்ள சோம்புரா கேட் என்ற இடத்தில் இருக்கும் டிரினிட்டி அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் கருண். இவரது மனைவி பவித்ரா (20). இவரை மே 4ம் தேதி முதல் காணவில்லை.

இது குறித்து கணவர் கருண் போலீசில் புகார் அளித்து இருந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் நேபாளத்தை சேர்ந்த திலக் (26) என்பவர் பவித்ராவை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை பவித்ராவின் வீட்டின் அருகில் புதைத்து சென்றது தெரியவந்தது.

திலக் தலைமறைவாக உள்ளார். தலைமறைவான திலக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பலாத்கார வழக்கு பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Topics: Chennai News