திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கொலை.. சென்னையில் பயங்கரம்!

women murder chennai

சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூர்ணிமா (26) என்ற மகள் உள்ளார்.

பூர்ணிமாவுக்கும், பட்டாபிராமை சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 10ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், வீட்டில் பூர்ணிமா மட்டும் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியே சென்றனர்.

அப்போது அருகில் வசிக்கும் பூர்ணிமாவின் பெரியம்மா மகேஸ்வரி நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பூர்ணிமா தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், பூர்ணிமாவின் பின்னந்தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொள்ளை முயற்சியில் பூர்ணிமா கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் ஏதும் காரணமா என்கிற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Topics:Chennai News