‘‘தமிழ் மக்களுக்கே என் சொத்து’’ ரஜினி எழுதி வைத்த உயில்..!!

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் பிரவேசிக்க தயாராகி வரும் நிலையில், அவரைப்பற்றி சில விமர்சனங்கள் வரத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தின் உயில் குறித்தும் தற்போது பேசத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 1999ம் ஆண்டு தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தன்னுடைய ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசுகையில், தன் பெயரில் அமைந்துள்ள ராகவேந்திரா மண்டபத்தின் நிலத்தை, ராகவேந்திரா டிரஸ்டில் தான் உயில் எழுதி வைத்துள்ளேன்.

தன்னுடைய வாழ்க்கை காலத்துக்கு பின்னர் இந்த டிரஸ்டிலிருந்து வரும் பணம் அனைத்தும் தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய பொது மக்களுகே செல்லும். இதிலிருந்து வரும் வருமானத்தை கொஞ்சம் கூட தன் குடும்பத்திற்கு போகாது. மேலும் தான் சம்பாதித்த சொத்துக்களில் பாதிக்கு மேல் பொதுமக்களுக்கு போகவுள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான உயில் பத்திரத்தையும் தன் வழக்கறிஞரிடம் அப்போதே எழுதி கொடுத்துவிட்டதாகவும், தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் பரிபூரண சம்மதத்துடன் எடுத்த முடிவு என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில், இவர் தமிழக மக்களுக்காக எழுதிவைத்த உயிலை தற்போது நெட்டீசன்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அதில், 1999ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியன்று, தன்னுடைய திருமண மண்டபத்தை மக்களுக்காக எழுதி வைக்கிறேன் என்று சொன்னவர் தான் இந்த ரஜினி. இது நாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால், மண்டபத்தின் வாடகை இரண்டு லட்சத்துக்கு மேல் வசூலிக்கிறார்கள் என்று அன்று வெளியான தினசரி நாளிதழின் செய்தியோடு கூடிய புகைப்படத்துடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Related Topics: Chennai News