விருதுநகர் மாவட்டத்தில் 461 போலீசார் அதிரடி மாற்றம்

காவல்துறையில் 3 ஆண்டுக்கு மேல் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நீண்ட காலமாக ஓரே இடத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சமீபகாலமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று விருதுநகர் மாவட்ட காவல் சரகத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் என 461 பேரை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் இன்று இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

related topics:chennai news