இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்; இன்னொருவர் சிக்கினார்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். இவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தற்போது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும்  பாபுபாரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, டிடிவி.தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Topics: Online Tamil News