சென்னையில் ”ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்” இன்று விநியோகம்!

தமிழகத்தில் காகித ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இந்த திட்டம் அவர் இறந்ததையொட்டி சற்று கால தாமதம் ஏற்பட்டது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க ஆதார் எண்களை இணைக்கும் பணியும் தொய்வு ஏற்பட்டது.

ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இதுவரை 50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாராக உள்ளன. ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கியது. சென்னை, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது.

எனவே, சென்னையை தவிரத்து மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் ரேஷன் கடைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டு வழங்கி வந்தன. மொத்தம் 11 லட்சம் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில், சென்னைக்கு வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இன்று முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Topics: Chennai News Live