உளவுதுறையை ஏமாற்றி வட மாநில தொழிலபதிருடன் பேசிய சசிகலா…! எப்படி தெரியுமா…!!

உளவுதுறையை ஏமாற்றி வட மாநில தொழிலபதிருடன் பேசிய சசிகலா…! போலீசார் அதிர்ச்சி…!!

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, சென்னை தி.நகரைச் சேர்ந்த ஜூவல்லரி அதிபர் ஒருவர், போயஸ் கார்டனில் செல்வாக்காகத் திகழ்ந்தார்.

அவர், கூவத்தூர் ரிசார்ட் உறுதிமொழியின்போது, சசிகலா தரப்பை ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நபரை சசிகலா, கடுமையாக எச்சரித்துள்ளார். அவரது வரவு-செலவு கணக்கை முடிக்க உறவுகளிடம் சொல்லியிருக்கிறார்.

தற்போது, அந்த ஜூவல்லரி அதிபர் தலைமறைவாக இருக்கிறராம். இதனால், சசிகலா தரப்பினரால் அந்த நபரிடம் பேச முடியவில்லை.

இதையடுத்து, சசிகலாவுக்கு நம்பிக்கைக்குரிய நபராகத் திகழும் சென்னையில் உள்ள வடமாநில தொழிலதிபர் ஒருவர், சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டாராம். தற்போதுள்ள சூழ்நிலையில் சந்திக்க முடியாது என்ற தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தத் தொழிலபதிர், சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று அடம்பிடித்ததால், வாட்ஸ்அப் அழைப்பில் இருவரும் பேசியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Topics: Chennai News