உங்களால்தான் எனக்கு இந்த நிலை.. புயலாக மாறிய சசிகலா..! குடும்ப உறவுகளுக்கு கடும் எச்சரிக்கை…!!

உங்களால்தான் எனக்கு இந்த நிலை.. புயலாக மாறிய சசிகலா..! குடும்ப உறவுகளுக்கு கடும் எச்சரிக்கை…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 5 நாள்கள் பரோலில் வந்தார். அவர், சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனைச் சந்திக்க மட்டும் சென்றார்.

இந்த நிலையில், மூன்று நாள்கள் அமைதிக்குப் பிறகு சசிகலா, குடும்ப உறவுகளிடம் நேற்று மனம்திறந்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சசிகலாவைச் சந்திக்க ஆதரவாளர்கள் யாரும் வரவேண்டாம்’ என்று தினகரன் சொல்லியுள்ளார்.

இதனால், தி.நகர் வீடு, பெரும்பாக்கம் மருத்துவமனையில் சசிகலாவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. இதனால், உளவுத்துறை போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

இருப்பினும், சசிகலா ஐந்து நாள்கள் பரோல் முடிந்து சிறைக்குச் செல்லும் வரை உளவுத்துறை 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் உள்ள இரண்டு முக்கிய நபர்களை சசிகலா எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சசிகலா, ‘நீங்கள் செய்த உள்ளடி வேலைகளால்தான் இந்த நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்’ என்று வெளிப்படையாகவே பேசியதாகக் கூறுகின்றனர்.

அதன்பிறகு, குடும்ப உறவுகளை சமரசப்படுத்திய சசிகலா, சொத்து, பண விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

Relate Topics: Chennai News