‘‘டிரைவரில்லா பேருந்து; இதென்ன பிரமாதம் இங்கு கூரையில்லா பேருந்தே ஓடுது’’ ராமதாஸ் காமெடி கமெண்ட்!

ஆந்திர மாநிலத்தில் புதிய தலைநகராக அமாராவதியை வடிவமைப்பது குறித்தும், அங்கு அமைக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைநகர் அமராவதிக்கும் புதிய தலைமை செயலகத்துக்கும் டிரைவர் இல்லா எலக்ட்ரிக் பேருந்து சேவையை முதல்கட்டமாக துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆந்திராவில் ஓட்டுனர் இல்லாத பேருந்து அறிமுகம்: சந்திரபாபு நாயுடு- இது என்ன பிரமாதம்… தமிழகத்தில் கூரை இல்லா பேருந்துகளே ஓடுகின்றனவே’’ என்று காமெடி கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். இந்த கமெண்ட்டுக்கு டுவிட்டரில் நெட்டீசன் பெரும் வரவேற்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Topics: Chennai News