குடியரசுத்தலைவர் தேர்தல் புறக்கணிப்பு.. ராமதாஸ் அதிரடி!

presidential-election-revocation-ramadoss

குடியரசுத்தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இந்திய நாட்டின் 14வது குடியரசுத்தலைவரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறுகிறது.

பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவர் வேட்பாளராகவும், அதே போன்று காங்கிரஸ் கட்சியில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. திமுக காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்தன.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாளை நடைபெறும் குடியரசுத்தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கிறது என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவே வருகின்ற குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Chennai News