இரட்டை இலை சசிகலா -ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் அவகாசம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி சசிகலா, ஓ.பி.எஸ் தரப்பு இடையே  ஏற்பட்டது.

கடந்த மார்ச் 22ம் தேதி தேர்தல் ஆணையம் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதிமுக கட்சிப் பெயர், கொடியை பயன்படுத்தவும் இரு தரப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.

சசிகலா அணி அதிமுக (அம்மா) என்ற பெயரிலும், ஓபிஎஸ் அணி அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) பெயரிலும் செயல்பட்டு வருகிறது, கடந்த பிப்ரவரி 17ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்த ஆவணங்களை தருமாறு இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு மனுஅளித்து இருந்தது.

இன்று  தேர்தல் ஆணையம் சசிகலா மற்றும் ஒ.பி.எஸ் ஆகிய இரு அணிகளுக்கு வருகிற ஜூன் 16ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

Related Topic:cinema news