வாட்ஸ்அப்பில் அந்த படம், வீடியோ..! அட்மினுக்கு ஜெயில் தண்டனை..!!

உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 20 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதேபோல், தவறான செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவவிட்டு வருவதும் அதிகமாகி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவறான தகவல்கள், மோசமான படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்தால் அந்த குரூப்பின் அட்மினுக்கு சிறைத் தண்டனை வழங்கலாம் என வாரணாசி மாவட்ட நீதிபதியும், காவல்துறையும் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் குரூப்பில் பரவும் தவறான செய்திகள் மற்றும் வீடியோக்களால் ஏராளமான பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு என கூறப்படுகிறது.

Related Topics: Online Tamil News