சாய்பாபா கோயிலுக்கு ரூ.90 லட்சம்..! பிறந்த நாளில் முகேஷ் அம்பானி தாராளம்..!!

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, கடந்த 19ம் தேதி தன்னுடைய 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம், ஷிருடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.90 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து சாய்பாபா கோயிலின் செயல் அலுவலர் ரூபல் அகர்வால் கூறுகையில், ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக துணைத் தலைவர் ஜி.டி.வாசியிடமிருந்து ஒரு இமெயில் நேற்று வந்தது.

அதில், மருத்துவமனைக்கு அனஸ்தீசியா கருவிக்கு ரூ.10 லட்சமும், எல்இடி பல்புக்கு ரூ.10.50 லட்சமும், ஷேடோ லெஸ் பல்புக்கு ரூ.25 லட்சமும், 2 இன்டென்சிவ் கேர் வென்டிலேட்டருக்கு ரூ.20 லட்சமும், நியூரோ டிரில் கருவிக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக சாப்பாடு வழங்குவதற்காக ரூ.4 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Topics: Online Tamil News