கடனை கொடு மனைவியை கூட்டி போ..! கொடுத்த கடனுக்காக மனைவியை கடத்தி சென்ற கடன்காரன்..!! 

ஐதராபாத்தின் அம்பார்பேட்டைய சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் அங்குள்ள நபர் ஒருவரிடம் ரூ 4 லட்சம் வாங்கி இருந்தார். இதில் ரூ 1 லட்சம் கொடுத்து விட்டார். மீதம் உள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை.

மேலும் வட்டி பணமும் சரியாக கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. எனவே ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு அடிக்கடி கடன் பணத்தை திரும்ப கேட்டு வந்தார். ஆனால் ஸ்ரீனிவாஸ் காலம் கடத்தியபடியே இருந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல கடன் கேட்டு கடன் கொடுத்தவர் வந்தார். அப்போது ஸ்ரீனிவாஸ் வீட்டில் இல்லை. அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீனிவாசின் மனைவியை வலுக்கட்டாயமாக கடனுக்கு பதிலாக அழைத்து சென்றார்.

நடுரோட்டில் தரதரவென அந்த பெண்ணை அழைத்து சென்றபோதும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Topics: Chennai News