‘‘அடேங்கப்பா.. 3 நிமிஷத்துல விமானமா?’’ 160 கி.மீ. வேகம்..! விற்பனையில் ‘பறக்கும் கார்’..!!

உலகில் நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு புதுமைகளை புகுத்தியும், வானளாவிய உயரத்திற்கு வளர்ந்துகொண்டுதான் செல்கிறது. அப்படி வானளாவிய உயரத்திற்கு வளர்ந்த தொழில்நுட்பம், வானில் சிறகடித்து பறக்கும் காரினை தற்போது உருவாக்கியுள்ளது பெருமைக்குரிய விஷயமே.

மேற்கு ஐரோப்பா நாட்டின் மொனாக்கோவில் உள்ள சுலோவாக்கியன் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை இந்த பறக்கும் காரை வெளியிட்டது. மினி விமானம் போன்ற ‘ஏரோ மொபைல்’ என்ற காரின் இறக்கைகள்  மடித்து வைத்துக்
கொள்ளும். இந்த பறக்கும் காரை ஓட்ட பைலட் உரிமம் கட்டாயம். இதன் விலை 1.2 மில்லியன் முதல் 1.5 மில்லியன் டாலர் ஆகும். விரைவில் விற்பனைக்கு வருகிறது.

இதுகுறித்து எலக்ட்ரானிக் தொழில்நுட்ப தலைமை அதிகாரியும், பேராசிரியருமான பிலீப் மாவ்பி கூறுகையில், இது மிகச் சிறந்த படைப்பு. இரண்டு இருக்கைகள் உடைய இந்த பறக்கும் கார் 3 நிமிடத்தில் அதன் ஓடுபாதையிலிருந்து ஹெலிகாப்டரைப் போல் பறக்கும் தன்மையுடையது. 120 கி.மீ முதல் 160 கி.மீ. வேகமும், சுமார் 750 கி.மீ. தூரம் பறக்கக்கூடியது.

ஏராளமான நிறுவனங்கள் இதனை தயாரிக்க முனைந்திருந்தாலும், இதனை விற்பனைக்கு கொண்டுசெல்ல மும்முரம் காட்டவில்லை. தொழில்நுட்பம் இருந்தாலும் மலிவான விலைக்கு கொண்டுவந்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்த கார்கள் வானில் ஓடத்தொடங்கும்போது, டிராபிக் எப்படி கட்டுப்படுத்துவார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது என்று அவர் கூறினார்.

Related Topics: Online Tamil News