அதிநவீன கழிப்பறை..! 66 எக்ஸ்பிரஸ் ரயில்களில் விரைவில் அறிமுகம்!

சமீபகாலமாக இந்திய ரயில்களில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை எனவும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை என பல பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.


இந்த புகார்களை தீர்க்கும் வகையில் புதிய வடிவமைப்பு கொண்ட கழிவறைகளை ரயில்களில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் 66 எக்ஸ்பிரஸ் ரயில்களில்  ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை அமைப்பட உள்ளது.

முன்னதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட  7000 ரயில்களில் கழிப்பறைகள் பயோ டாய்லட்டுகளாக தரம் உயர்த்தும் பணியும், ரயில் நிலையங்களில் 650 கழிப்பறைகள் அமைக்கும்  பணிகள் தற்போது நடந்து வருகிறது.

66 எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதியதாக அமைப்படும் கழிவறையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கு டைபர் மாற்றும் சிறிய அறை இருக்கும்.

சுத்தமாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.ரயில்வே கழிவறைகளை நல்ல முறையில் பராமரிக்க உயர் தரமான தரையையும் போட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

related topics:chennai news