மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் சிக்கல்; டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

2ஜி அலைக்கற்றையை ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக விற்பனை செய்தததாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் மீது சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சிபிஐ தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கிலிருந்து மாறன் சகோதரர்களை விடுவித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டநிலையில், தற்போது மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் முன்னாள் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Topics: Chennai News