சிதம்பரத்தின் வீட்டில் இந்தியாவையே அதிர வைத்த கொலை வழக்கு ஆவணங்கள்? சிபிஐ அதிர்ச்சி..!!

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் கடந்த செவ்வாய்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவரது வெளிநாடு முதலீடுகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் மும்பை வோர்லி பகுதியில் உள்ள பீட்டர் முகர்ஜி மற்றம் இந்திராணி முகர்ஜி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2007 – 08ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்பதே ப. சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு. இந்த நிறுவனமானது பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜிக்கு சொந்ததமானதாகும்.

இந்திராணி முகர்ஜியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் பீட்டர் மற்றும் இந்திராணி ஆகியோர் சிறையில் உள்ளனர். எனவே ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்னை இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

எனவே இது குறித்த ஆவணங்கள் ப. சிதம்பரத்தின் வீட்டில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Topics: Chennai News