காதலியுடன் ஜாலியாக இருக்க வாலிபர் செய்த அதிர்ச்சி காரியம்.! வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்.!!

காதலியுடன் ஜாலியாக இருக்க வாலிபர் செய்த அதிர்ச்சி காரியம்.! வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்.!!

கன்னியாக்குமரியின் ஆரல்வாய்மொழி,வடசேரி,பூதப்பாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார் எழுந்து வந்தன.

இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது சம்பவ தினத்தன்று வடசேரி பகுதியில் போலீசார் நின்று கொண்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்த போலீசார் அவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

இவர் தான் பல இடங்களில் பைக்குகளை திருடியவர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் அவர் போலீசார் இடத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது.

என் காதலி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படிக்கிறார் அவரை பார்க்க வரும்போது பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்களை நோட்டமிடுவேன்.

பிறகு யாரும் பார்க்காத நேரத்தில் பைக்கை திருடி சென்று விற்று அந்த பணத்தை என் காதலிக்காக செலவழிப்பேன்.

அவருடன் ஜாலியாக ஊர் சுற்றவே இவ்வாறு செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரிடம் இருந்த 21 வாகனங்களை கைப்பற்றிய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Related Topics:Chennai  News