வழிப்பறி செய்வதில் தகராறு.. ரவுடி பல்பு குமாரை கொன்ற சக ரவுடி டீம்! சென்னையில் பயங்கரம்!

rowdy murder chennai
வழிப்பறி செய்வதில் தகராறு.. ரவுடி பல்பு குமாரை கொன்ற சக ரவுடி டீம்! சென்னையில் பயங்கரம்!

வழிப்பறி செய்வதில் தகராறு.. ரவுடி பல்பு குமாரை கொன்ற சக ரவுடி டீம்! சென்னையில் பயங்கரம்!

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை கெனால் தெரு சந்திப்பில் தலை நசுங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிய வந்தது.

இதனையடுத்து அண்ணா சதுக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் பல்பு குமார் (30) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை டீம் விசாரித்ததில் துப்பு துலங்கியது. பல்பு குமார், அதே பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கண்ணகிநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதும் தெரியவந்தது.

இவருக்கும் பாரதி சாலை பகுதியில் உள்ள நண்பர்கள் சிலருக்கும் பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. பிரவீன் என்பவரின் சகோதரியை குமார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே வாயில் கல்லை தூக்கி போட்டு குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், இருவரை பிடித்து விசாரித்தில், வழிப்பறி செய்வது தொடர்பாக எல்லை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலும் கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related Topics:Chennai News