ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்திக்க காரணம் இதுதானாம்.!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகின்றது. இதனால் குடிநீர் பஞ்சம் மற்றும் விலங்குகளுக்கு போதுமான தீவனங்கள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றது.

இதற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். அதே போன்று தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க அனுமதிக்கக்கூடாது.

தமிழகத்தில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை போக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Online Tamil News