போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனை தீரும்வரை சம்பள உயர்வு வேண்டாம்.. ஸ்டாலின் அதிரடி.!

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனை தீரும்வரை சம்பள உயர்வு வேண்டாம்.. ஸ்டாலின் அதிரடி.!

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை திமுக ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு தரும் மசோதாவானது சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலன் கேள்வி எழுப்பினார்.

அப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாத நிலையில் எம்எல்ஏக்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு தேவையா என்று வினவினார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்காடு அதிமுக உறுப்பினர் இன்னும் தொகுப்பு வீட்டில் ஏழ்மையாகத் தான் இருக்கிறார்.

அனைத்து எம்எல்ஏக்களும் பணபலம் பெற்றவர்கள் இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி நமது எம்எல்ஏக்களை நாமே காப்பாற்றவில்லை என்றால் யார் காப்பாற்றுவது என்று கேட்டார்.

எனினும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு முறையில் எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதா சட்டசபையில் நிறைவற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

திமுக எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம். மிகவும் கடுமையான நிதி நெருக்கடியில் அரசின் நிலை இருக்கும் போது சம்பள உயர்வு தேவைதானா என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறமாட்டோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Topics:Chennai online news