குடிநீர் பைப்லைனை உடைத்த மணல் லாரிகள்; பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு!

கரூர் மாவட்டம், மாயனூர் அரசு மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த குவாரிக்கு வரும் மணல் லாரிகள் நிறுத்தும் இடத்தை முறைப்படுத்தாமல், குடிநீர் பைப் லையன் செல்லும் மாயனூர் சாலைகளில் நிறுத்துவதால் குடிநீர் பைப் லையன் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பல முறை அதிகரிகளிடம் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Topics: Online Tamil News