விஷால் வேட்புமனு நிராகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்!

mkstalin-speech
விஷால் வேட்புமனு நிராகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்!

விஷால் வேட்புமனு நிராகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் இன்று நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திட்டமிட்டு விஷால் வேட்புமனுவை நிராகரித்தாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதனை உண்மையை சொல்ல வேண்டும்.

ஆர்.கே.நகரில் நடைபெறும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும். மக்களுக்கும் ஏற்படும்.

அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கும், மாவட்டம் வாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கும் உரிமை இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

ஆட்சியே இல்லை என்று கவர்னர் முடிவு செய்து அந்த பணியில் இறங்கி இருக்கிறாரா? என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

ஆளுநர் ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு அ.தி.மு.க.வை பெரும்பான்மை நிரூபிக்கச் செய்ய உத்தரவிட்டால் வரவேற்கதக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Topics:Chennai News