கரூர் அருகே கார்- லாரி மோதி தீ விபத்து..! 4 பேர் பலி.!

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே நள்ளியபாளையத்தில் காரும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னிலை அருகே கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் கரூரை நோக்கி ஒரு லாரியும் வேகமாக வந்தது. அவ்வேளையில் எதிர்பாராத விதமாக காரும் லாரியும் மோதிக்கொண்டன.
மோதிக்கொண்ட வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரில் வந்த 4 பேரும் அந்த இடத்திலேயே தீயில் கருகி பலியானார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்பன போன்ற விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Topics:Online Tamil News