நடிகர் சந்தானத்தை கைது செய்ய பாஜக போர்க்கொடி.!

actor santhanam attacked bjp person

நடிகர் சந்தானத்தை கைது செய்ய பாஜக போர்க்கொடி.!

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாஜக பிரமுகரை நடிகர் சந்தானம் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சந்தானத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் பேனர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் பிரேம் ஆனந்த் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சந்தானம் மீது காவல்துறையே உடனே நடவடிக்கை எடு. கைது செய் கைது செய் என்று வாசகம் அடங்கியுள்ள பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் சந்தானத்தை சேர்ந்த ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Chennai online news tamil