ரஜினி படம் நடிச்சா வரவேற்போம்! அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம்.. சீமான்.!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒத்து வராது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினி தமிழகத்தை ஆள்வது பற்றி யோசிக்காமல் அவர் நிறைய படங்களில் நடித்து மக்களை திருப்திபடுத்தட்டும். அதனை நாங்களும் வரவேற்போம்.

அரசியலுக்கு வர நினைத்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம். தமிழகத்தை ஆள எங்களுக்கு தெரியும். எனவே இதுபோன்று சும்மா அவ்வப்போது கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்தி விட்டு படம் நடிக்கின்ற வேலைகளை பார்க்கட்டும்.

மேலும், தமிழனாக தன்னை உணர்வதாக தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் பேச்சு திறமையை பாராட்டி பேசியது வியப்பை அளிக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Chennai Live News