பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை தீவிரம்.!

Sugarcane like farmer
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை தீவிரம்.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை தீவிரம்.!

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக சின்னமனூரில் கரும்பு அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கரும்புகளை வாங்கிச் செல்ல வெளி மாவட்ட வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் சின்னமனூர் மார்க்கயன்கோட்டை பிரிவிலிருந்து கோயில்பட்டி வரை சுமார் 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சின்னமனூரில் லாரிகளுடன் குவிந்துள்ளனர்.

Related Topics:Online tamil news