சசிகலா அறையில் சிக்கிய ரகசிய கடிதம்.! வசமாக மாட்டிகொண்ட சசிகலா.!!

சசிகலா அறையில் சிக்கிய ரகசிய கடிதம்.! வசமாக மாட்டிகொண்ட சசிகலா.!!

சொத்து குவிப்புவழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் சிறைக்கு சென்ற பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வருமான வரிதுறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

நீண்ட நேரமாக சோதனை நடைபெற்றதால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் போயஸ் தோட்டத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது இது பற்றி கூறிய வருமான வரிதுறையினர் நாங்கள் சோதனை நடத்தவில்லை. சசிகலாவின் அறையிலும் ஜெ. உதவியாளர் அறையிலும் தான் சோதனை நடத்தியுள்ளோம் என கூறி இருந்தனர்.

இந்நிலையில் போயஸ் தோட்டத்திலுள்ள சசிகலா அறையில் ஒரு ரகசிய கடிதம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்ட குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் என தெரிய வந்துள்ளது.

மேலும் இது பற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரிதுறையினர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Topics:Chennai News