வளர்ப்பு நாயே வீட்டின் உரிமையாளரை கொடூரமாக கொன்ற சம்பவம்.! சென்னையில் நடந்த பரிதாப சம்பவம்.!!

வளர்ப்பு நாயே வீட்டின்உரிமையாளரை கொடூரமாக கொன்ற சம்பவம்.! சென்னையில் நடந்த பரிதாப சம்பவம்.!!

மனிதர்கள் செல்லமாக வளர்கும் நாய்கள் சில நேரத்தில் அவர்களுக்கு எமனாகி விடுகிறது.

கடந்த 2016 ஆண்டு வேலூரில் ரோட்வீலர் வகை நாய்கள் தாக்கியதால் நாயின் உரிமையாளர் கிருபாகரன் என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் சந்தோஷ்.

இவர் தாய் கொளரி மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்துள்ளதால் ஒன்றாக தனது வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் தனது வீட்டில் இரண்டு ரோட்வீலர் நாய்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் சந்தோஷின் தாய் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த ரோட்வீலர் நாய்கள் அவரை கொடுமையாக தாக்கி அவரின் முகத்தை கிழிதுள்ளது.

இதனால் சம்பவ இடத்திலே கொளரி ரத்த காயங்களுடன் பரிதாபமாக இறந்துள்ளார்.

அப்போது எதிர்பராத விதமாக மொட்டை மாடிக்கு சென்ற சந்தோஷின் குடும்பத்தினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது பற்றிவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Topics:Chennai  News